கண்ணி வெடி அகற்றப்படாத பிரதேசங்கள் தவிர கிளிநொச்சி,முல்லைத் தீவு உள்ளிட்ட வடக்கின் எந்தப் பகுதிக்கும் எந்தவொரு இலங்கையரும் சுதந்திரமாகச் சென்றுவரலாம் என இராணுவப் பேச்சாளர் மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க தெரிவித்தார். வீரகேசரி இணையத்தளத்துக்கு இன்று அவர் வழங்கிய விசேட செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். வடக்கு கிழக்குக்கு செல்லும் மக்களின் நடமாடும் சுதந்திரம் மற்றும் பாதுகாப்பு குறித்துக் கேட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
“ஆரம்ப காலங்களில் வடக்குக்கு செல்வதற்கு வரிகள் அறவிடப்படும். வரிப் பணத்தை கொடுத்த பின்னர் தான் உள்ளே செல்ல அனுமதிக்கப்படுவார்கள். ஆனால் இப்போது அந்த நிலை இல்லை. இலங்கையர்கள் ஒவ்வொருவருக்கும் அங்கு சென்றுவர முழுச் சுதந்திரம் உண்டு. வெளிநாட்டில் வசிக்கும் இலங்கையர்கள் கூட எமது அனுமதியின்றி செல்லலாம். வெளிநாட்டில் நிரந்தர வதிவிடம் பெற்றவர்கள் இலங்கையில் பிறந்திருந்திருப்பின் அவர்கள் செல்வதற்கும் நாம் தடைகள் எதுவும் விதிப்பதில்லை. ஆனால் இலங்கையில் பிறக்காத வெளிநாட்டவர்கள் பாதுகாப்பு அமைச்சின் அனுமதியுடனேயே சென்றுவர முடியும். வெளிநாட்டவர்கள் தொடர்பில் நாம் சில நடைமுறைகளை பின்பற்றுகிறோம்________________________