என் வலைப் பதிவுக்கு வந்திருக்கும் உங்களை அன்போடு வரவேற்கின்றேன்.புதிய விடயங்களை புதிய கருத்துக்களை இங்கே எதிர்பார்க்கலாம்...நன்றிகள் > >

புதன், 31 மார்ச், 2010

காதல் ஜோடியை கொன்றவர்களுக்கு மரண தண்டனை

அந்த சாதியில், ஒரே உட்பிரிவைச் சேர்ந்தவர்கள் சகோதரர்களாக கருதப்படுவது வழக்கம். எனவே, அவர்களின் காதலுக்கு பப்லியின் குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். அதையும் மீறி, இருவரும் வீட்டை விட்டு ஓடிச்சென்று, சண்டிகாரில், 2007-ம் ஆண்டு மே 18-ந் தேதி ரகசிய திருமணம் செய்து கொண்டனர்.

இதுதொடர்பாக, அவர்களது சாதியின் பஞ்சாயத்து கூடியது. அதில், மனோஜ்-பப்லி ஜோடியின் திருமணம் செல்லாது என்றும், இருவரும் பிரிய வேண்டும் என்றும் பஞ்சாயத்து தலைவர் கங்காராஜ் தீர்ப்பு அளித்தார்.

இந்த உத்தரவால், தங்களது உயிருக்கு ஆபத்து இருப்பதை உணர்ந்த மனோஜ், பப்லி ஆகியோர், போலீசாரை அணுகினர். அவர்களை ஜுன் 15-ந் தேதி, போலீசார் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவர்களுக்கு போலீஸ் பாதுகாப்பு அளிக்க கோர்ட்டு உத்தரவிட்டது.

கோர்ட்டில் ஆஜராகி விட்டு பஸ்சில் திரும்பிக் கொண்டிருந்த மனோஜ், பப்லி ஆகியோரை, பப்லியின் உறவினர்கள், பஸ்சில் இருந்து இறக்கி, காரில் கடத்திச் சென்றனர். பிறகு, பப்லியை விஷம் கொடுத்து கொலை செய்தனர். மனோஜை கழுத்தை நெரித்து கொன்றனர். இருவரின் பிணங்களும், கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில், 23-ந் தேதி, ஒரு கால்வாயில் கண்டெடுக்கப்பட்டன.

கவுரவத்துக்காக செய்யப்பட்ட இந்தக் கொலை தொடர்பாக, மனோஜின் தாய் சந்தர்பதியின் புகாரின்பேரில், பப்லியின் சகோதரர் சுரேஷ், மாமாக்கள் ராஜேந்தர், பாருராம், ஒன்றுவிட்ட சகோதரர்கள் சதீஷ், குர்தேவ், பஞ்சாயத்து தலைவர் கங்காராஜ், டிரைவர் மந்தீப்சிங் ஆகியோர் மீது வழக்குத் தொடரப்பட்டது.

கர்னாலில் உள்ள கூடுதல் மாவட்ட செசன்சு கோர்ட்டில் வழக்கு விசாரணை நடைபெற்று வந்தது. 7 பேரும் குற்றவாளிகள் என்று நீதிபதி வாணி கோபால் சர்மா, கடந்த 25-ந் தேதி தீர்ப்பு அளித்தார். தண்டனை விவரம் தொடர்பாக, 29-ந் தேதி விவாதம் நடைபெற்றது.

இது அரிதிலும் அரிதான வழக்கு என்றும், எனவே, குற்றவாளிகளுக்கு மரண தண்டனை அளிக்க வேண்டும் என்றும் அரசு வக்கீல் கேட்டுக்கொண்டார்.

இந்நிலையில், இவ்வழக்கில் நேற்று நீதிபதி வாணி கோபால் சர்மா, தண்டனை விவரத்தை அறிவித்தார். கொலை தொடர்பாக, பப்லியின் சகோதரர், ஒன்றுவிட்ட சகோதரர்கள், மாமாக்கள் ஆகிய 5 பேருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தார். 


கொலைக்கு காரணமான, பஞ்சாயத்து தலைவர் கங்காராஜ்க்கு ஆயுள் தண்டனை விதித்தார். காதல் ஜோடியை கடத்திச் சென்ற டிரைவர் மந்தீப்சிங்குக்கு 7 ஆண்டு ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டது.

சாதி பஞ்சாயத்துகள், அரசியல் சட்டத்தை மீறி செயல்படுவதாக நீதிபதி கருத்து தெரிவித்தார். அசட்டையாக செயல்பட்ட போலீசார் மீது நடவடிக்கை எடுக்குமாறும் உத்தரவிட்டார்