சுவிட்சர்லாந்தில் குற்றச் செயல்களின் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.2009ம் ஆண்டில் வாரத்திற்கு ஒரு கொலைச் சம்பவம் பதிவாகியுள்ளதாக அந்நாட்டு காவல்துறை வெளியிட்டுள்ள புள்ளி விபரத் தகவல்களில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அதிக பட்சமாக சுவிட்சர்லாந்தில் கொள்ளைச் சம்பவங்கள் இடம்பெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.வருடமொன்றுக்கு சுமார் 250000 குற்றச் செயல்கள் பதிவாவதாகக் குறிப்பிடப்படுகிறது.
காவல்துறையினர் மீதான தாக்குதல் சம்பவங்களும் உயர்வடைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்படுகிறது.கடந்த வருடத்தில் 51 கொலைச் சம்பவங்கள், 185 கொலை முயற்சி சம்பவங்கள், 524 கடுமையான தாக்குதல் சம்பவங்கள் மற்றும் 666 பாலியல் வல்லுறவுச் சம்பவங்கள் கடந்த ஆண்டில் பதிவு செய்யப்பட்டுள்ளது