டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு எதிராக நேற்று நடந்த ஐ.பி.எல். 20 ஓவர் லீக் போட்டியில், சச்சினின் பேட்டைப் பயன்படுத்தி அதிரடியாக ரன் குவித்ததாக ஹர்பஜன் தெரிவித்துள்ளார். மும்பையில் நேற்று நடந்த போட்டிக்கு பின்னர் பேசிய ஹர்பஜன், “இன்றைய போட்டியில் நான் விளையாடப் பயன்படுத்தியது சச்சினின் பேட். அந்த பேட்டை நான் பயன்படுத்திக் கொள்ள அனுமதி அளித்ததற்காக சச்சினுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்” என்றார்
.இப்போட்டியில் முதலில் பேட் செய்த மும்பை இண்டியன்ஸ் அணி, சச்சினின் பொறுப்பான ஆட்டத்தால் துவக்கத்தில் சிறப்பாக ரன் சேகரித்த போதும், அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்ததால், 17வது ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 119 ரன்கள் எடுத்து தடுமாறியது.
அப்போது களமிறங்கிய ஹர்பஜன் 18 பந்துகளில் 49 ரன்கள் விளாசி அணியின் ரன் எண்ணிக்கையை 172 ஆக உயர்த்தினார். அவரது இன்னிங்சில் 8 பவுண்டரிகளும், 2 சிக்ஸரும் அடங்கும்