என் வலைப் பதிவுக்கு வந்திருக்கும் உங்களை அன்போடு வரவேற்கின்றேன்.புதிய விடயங்களை புதிய கருத்துக்களை இங்கே எதிர்பார்க்கலாம்...நன்றிகள் > >

திங்கள், 29 மார்ச், 2010

குவைத்தில் நிர்க்கதியான 70 இலங்கையர் இன்று நாடு திரும்புகின்றனர்

நோய்வாய்ப்பட்டோருக்கு விசேட சிகிச்சை
குவைத்தில் நிர்க்கதியான நிலை யிலிருந்த 70 இலங்கையர்கள் இன்று காலை நாடு திரும்புவதாக வெளிநாட்டு வேலை வாய்ப்பு பணியகத்தின் மேலதிக பொது முகா மையாளர் எல். கே. றுகுணுகே நேற்று தினக ரனுக்குத் தெரிவித்தார்.கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தை இன்று காலை வந்தடையும் இவர்கள்


தமது சொந்த இடங்களுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதுடன் நோய்வாய்பட்டிருப்போருக்கு விசேட சிகிச்சையளிப்பதற்கு ஏற் பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் கூறினார்.
குவைத்தில் நிர்க்கதியான நிலை யிலிருந்த இலங்கையைச் சேர்ந்த 66 பணிப்பெண்களும் 04 ஆண்களுமே இன்று நாடு திரும்புகின்றனர்.
இவர்களுள் ஒருவர் புற்றுநோயினால் பாதி க்கப்பட்டவ ரெனவும் இவரை வைத்தியசாலை யில் அனுமதித்து சிகிச்சைகளை முன்னெடுப்பதற்கு தேவையான அனைத்து வசதிகளையும் பணியகம் செய்திருப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்