நியூசிலாந்துக்கு எதிராக எதிர்வரும் 19ஆம் திகதி ஆரம்பிக்கவுள்ள டெஸ்ட் போட்டியில் அவுஸ்திரேலிய அணியின் துணை அணித்தலைவர் மைக்கல் கிளார்க் கட்டாயம் பங்கேற்பார் என அவுஸ்திரேலியா கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.ஆஸ்ரேலிய அணியின் துணை அணித்தலைவர் மைக்கல் கிளார்க் (29). இவருக்கும் மொடல்
அழகி லாரா பிங்கிள் (22) என்பவருக்கும் நீண்ட காலமாக காதல் இருந்து வந்தது. விரைவில் இருவரும் திருமணம் செய்து கொள்ள இருந்தனர். இந்நிலையில் லாரா பிங்கிள், நிர்வாண படங்கள் அவுஸ்திரேலிய ஊடகங்களில் வெளியானதை அடுத்து தனது நிச்சயதார்த்தத்தை ரத்து செய்துள்ளார் மைக்கல் கிளார்க்.
மைக்கல் கிளார்க், லாரா பிங்கிள் இருவரும் தங்களுக்குள் இருந்து வந்த இரண்டு ஆண்டு திருமண ஒப்பந்தம் முடிவுக்கு வந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இந்த காலகட்டத்தில் எங்களது தனிமைக்கு மதிப்பளிக்க வேண்டும். இதுகுறித்து மேலும் எந்த தகவலும் தெரிவிக்க விரும்பவில்லை, எனவும் தெரிவித்துள்ளனர்.
கிளார்க்கின் இந்த முடிவை அடுத்து, முன்னாள் அணித்தலைவர் ஸ்டீவ் வக் கூறுகையில், கிளார்க்கிற்கு இது கடினமான காலம். அணித்தலைவராக இதற்கு முன், இவர் சிறப்பாக பணி செய்துள்ளார். தற்போது தனிப்பட்ட வாழ்க்கையில் நடந்த விடயங்கள், இவரது அணித்தலைவர் திறமை உள்ளிட்ட எதிர்கால கிரிக்கெட் திறமையை பாதிக்காது என நம்புகிறேன், என்றார்.
தனது காதலியுடன் ஏற்பட்ட பிரச்சினையை அடுத்து, கிளார்க், நியூசிலாந்து தொடரில் இருந்து விலகி நாடு திரும்பினார் என்பதும் குறிப்பிடத்தக்கது